தமிழக பள்ளி, கல்லூரிகளின் பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவி உயர்வு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து 2021-2022ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை முற்றிலும் குறையாததால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் காலிப்பணியிடங்களை கணக்கெடுத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள் 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டு, அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை