துறைத்தேர்வுகள் இனி கணினி வழியில் நடைபெறும் TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இதனிடையே கடந்த 29.04.2021 ல் நடைபெற இருந்த துறைத்தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணிகளை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற இருக்கும் தேர்வுகளின் பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம். அதன் படி 2021 ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு பட்டியல் கடந்த ஆண்டே வெளியானது.
அதன் கீழ் இந்த ஆண்டு மொத்தம் 42 போட்டித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 7 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாததால் சுமார் 34 தேர்வுகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் தடைபட்டதான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், அதற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 29.04.2021 தேதியில் நடைபெற இருந்த துறைத்தேர்வுகள் தற்போது அப்ஜெக்ட்டிவ் மற்றும் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான குறிப்புகள், மாதிரி தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கணினி வழித்தேர்வுக்கு தயாராகும் வகையில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை