அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்விற்கான தேதி அறிவிப்பு.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்விற்கான தேதி அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 5000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வரவிருக்கும் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியது. இந்த பணியிடங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் 2023 ஜனவரி 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்குமாற்றுத்திறனாளர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்றவர்களுக்கு நேர்முக தேர்வு ஜனவரி 4ம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை