பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்குமா...?
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பழ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. பகுதிநேர பணியாளர்களுக்கு 1000 ரூபாய் போனஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணிபுரிவதால் இந்த போனஸ் அறிவிப்பு எங்களுக்கு பொருந்தாது.எனவே 240 நாட்கள் என்ற விதியை தளர்த்தி குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை