வருடம் இருமுறை வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தற்போது ஏன் வழங்கப்படவில்லை..?
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க அகவிலைப்படி உயர்வு ஏன் வழங்க வில்லை என தமிழக பாஜக தலைவர் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வரை அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். மேலும் 01.01.2022 அன்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 01.07.2022 என காலம் தாழ்த்தி அரசு வழங்கியது. மேலும் இந்த 6 மாத காலம் தாழ்த்தியதற்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை தற்போது வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் ஆண்டுக்கு இருமுறை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதாவது 01.07.2022 அன்று வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி விலை உயர்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 4% உயர்வு வழங்கப்பட்டு தற்போது 38% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
அதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியிருப்பதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை