மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தடை செய்ய கோரி வழக்கு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தடை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆதார் இணைப்பினால் சமூக நலத்திட்ட பயன்கள் கிடைப்பதில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால் மின் கட்டண மானியம் பெற மின் நுகர்வோரை ஆதார் எண்ணை இணைக்கும் படி அறிவுறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்தால் வீட்டு உரிமையாளரின் ஆதார் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் வாடகைதாரர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது என்று கூறினார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில், மீட்டர் அடிப்படையில் மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படும் என்றும் இது தொடர்பாக அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகு அரசாணை வெளியிடப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டிசம்பர் 19க்கு தள்ளி வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை