மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளி திறப்புக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகள் திறந்தவுடன் அனைவருக்கும் முக கவசம் கட்டாயம் அணிவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை