Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வேளாண் இளநிலை பட்டப் படிப்புக்கான வகுப்பு துவங்கும் தேதி அறிவிப்பு

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் உறுப்பு,இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றது.2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.


இந்நிலையில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவுகளில் தலா 20 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 125 இடங்களும் உள்ளது.


கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6 ஆயிரத்து 920 இடங்கள் நிரப்பப்படஉள்ளது.இதற்கு ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 489 விண்ணபங்கள் பெறப்பட்டது.முதல் இரண்டு பிரிவுகளுக்கும் தலா 50 மாணவ மாணவிகளுக்கு, மாற்றுத் திறனாளி பிரிவில் 59 பேரும் கலந்தாய்வுக்கு கலந்து கொண்டனர்.


இவ்வாறு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவ மாணவிகளுக்கு துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மேலும் மீதமுள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.இதையடுத்து வரும் ஜனவரி 6 ஆம் தேதி வேளாண் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் இளநிலை பட்டப் படிப்புக்கான வகுப்பு துவங்கும் தேதி அறிவிப்பு வேளாண் இளநிலை பட்டப் படிப்புக்கான வகுப்பு துவங்கும் தேதி அறிவிப்பு Reviewed by Rajarajan on 29.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை