CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, செய்முறைத்தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022- 2023ம் செய்முறை தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுத உள்ளனர். இதனால் அரசு அறிவுறுத்தலின் படி பாடங்கள் அனைத்தும் விரைவாக முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் அறிவிக்கப்பட்ட தேதியில் சரியாக தேர்வுக்கு வர வேண்டும். ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களுக்காக தேர்வுக்கு வர முடியாதவர்களுக்கு பின்னர் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும்.
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட தேதிக்கு அப்பாற்பட்ட சிறப்பு அனுமதிக்கான எந்த கோரிக்கையும் CBSE வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். மேலும் கல்வி வாரியம் வழங்கியுள்ள தேர்வு கால அட்டவணையின் படி தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கியுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை