Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

4000 கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை

 தமிழ்நாடுjஅரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.



 இப்பணியிடங்கள் தவிர , மீதம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும் , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. 




 இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மான்யக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.




பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று ( 15.12.2022 ) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது . கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் ( 15.12.2022 ) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம். 




இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் வழிகாட்டுநெறிமுறைகளின் அடிப்படையில் அரசால் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ .20,000 / - மதிப்பூதியமாக வழங்கப்படும்.


இணையவழியாக விண்ணப்பிக்கும் படி நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது :

கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வு என்பது இணையவழியான விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதாக அமையும். 

விண்ணப்பதாரர் பதிவு , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும்.

 இணையவழியாக விண்ணப்பிக்கும் படி நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது .



Download Here 

null

null

4000 கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை 4000  கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை Reviewed by Rajarajan on 15.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை