2023 முதல் JEE (மெயின்), NEET, CUET ஆகிய தேர்வுக்கான நிலையான காலெண்டரை அறிவிக்க முடிவு
2023 முதல் JEE (மெயின்), NEET, CUET ஆகிய தேர்வுக்கான நிலையான காலெண்டரை அறிவிக்க முடிவு. போட்டித் தேர்வுகளை நடத்துவதை முறைப்படுத்தவும், கடைசி நேர குழப்பத்தைத் தவிர்க்கவும், கூட்டு நுழைவுத் தேர்வு போன்ற இளங்கலை சேர்க்கை தேர்வுகளுக்கு நிலையான காலெண்டரை உருவாக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2023 முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) மற்றும் பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-UG). பொறியியல், மருத்துவம் மற்றும் இளங்கலை கல்லூரிகளில் சேர்க்கைக்கான தேர்வு அட்டவணையை ஒழுங்குபடுத்த மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளது.
தேசிய தேர்வுகள் கழகம் (NTA), இதற்கான காலண்டரை முடிவு செய்து அறிவிக்க உள்ளது.
"ஜேஇஇ (முதன்மை) தேதிகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருக்கும், அதே நேரத்தில் CUET-UG ஏப்ரல் மூன்றாவது வாரம் மற்றும் மே முதல் வாரத்திற்கு இடையில் நடைபெறும். மே முதல் ஞாயிற்றுக்கிழமை நீட்-யுஜி தொடர்ந்து நடைபெறும். சரியான தேதிகள் அந்தந்த தேர்வுகளின் சுற்றறிக்கையில் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை