Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

உங்கள் ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண் இணைப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா..?

 உங்கள் ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண் இணைப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கான படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில், https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற TANGEDCOவின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.

அந்த பக்கத்தில், ‘Enter Service Connection Number’ மற்றும் ‘Enter Registered Mobile Number’ என்ற TABகள் இருக்கும். 

அதில், EB சர்வீஸ் எண்ணையும், அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் பதிவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும்.

இப்பொழுது திறக்கும் பக்கத்தில், உங்கள் மின் இணைப்பிற்கான அனைத்து விவரங்களும், பெயர், முகவரி உட்பட விவரமாக கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில், கீழ் பகுதியில் AADHAAR என்ற பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில், நீங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், CLICK TO LINK AADHAAR என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை, நீங்கள் ஆதார் மின் இணைப்பிற்கான நடவடிக்கையை தொடங்கி, மின்வாரியம் அதனை இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், ‘YET TO BE APPROVED’ என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், நீங்கள் கொடுத்த ஆதார் – மின் இணைப்பு விண்ணப்பம் மின்வாரியத்தால் உறுதி செய்யப்பட்டால், அப்போது அங்கு ‘UPDATED’ என்று காண்பிக்கப்படும்.

இந்த செயல் முறையின் மூலம் உங்கள் ஆதார் – மின் இணைப்பு சரியாக உள்ளதாக என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண் இணைப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா..? உங்கள் ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண் இணைப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா..? Reviewed by Rajarajan on 26.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை