தமிழக அரசு அதிரடி உத்தரவு.. 7 முதல் ரயில் மற்றும் மாவட்டங்களில் இடையே பஸ் போக்குவரத்து அனுமதி
மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவைக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Was
தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard operating procedure), 7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது
மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard operating procedure), தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை