Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும்

மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறை தான் இ-பாஸ். பொதுபோக்குவரத்து கடந்த  5 மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு மாவட்டம் விட்டு மாவட்டம், வேறு மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு பயணிக்கலாம். அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இ-பாஸ் கிடைப்பதில்லை என்று பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததை அடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கொடுக்கப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இ-பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம், வேறு மாநிலங்கள் பயணிக்க நடைமுறையில் இருக்கும் இ-பாஸ் நடைமுறை இனி கூடாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் Reviewed by Rajarajan on 22.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை