Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10 வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் கிடையாது, மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் சமர்பிக்கலாம்... பள்ளி தேர்வுகள் இயக்ககம்


Was


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. www.tnresults.nic.inwww.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
Was
மொத்த பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை: 9,38,829
மாணவியர் - 4,68,070
மாணவர்கள்- 471759
தேர்ச்சி பெற்றவர்கள்- 100 சதவீதம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத 12,690 பள்ளிகள் பதிவு செய்தன. இதில் 7,368 மேல்நிலை பள்ளிகள். 5,322 உயர் நிலை பள்ளிகள். 6,235 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 17 முதல், 21 வரை, பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்.
10 வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் கிடையாது, மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் சமர்பிக்கலாம்... பள்ளி தேர்வுகள் இயக்ககம் 10 வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் கிடையாது, மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் சமர்பிக்கலாம்... பள்ளி தேர்வுகள் இயக்ககம் Reviewed by Rajarajan on 10.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை