10/ 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப் பட்டியல்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு.
2020 , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப் பட்டியல்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1. பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு தொடர்பாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் , எந்தெந்த மாணவருக்கு என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதற்கான பட்டியலை வகுப்பு வாரியாக பதிவெண் வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.
Was
2. அதன்பின் , 24.08.2020 முதல் 29.08.2020 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுத் துறை இணையதளத்திற்குச் சென்று , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , 2020 , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் பள்ளி மாணவர்களது பெயர் , ( ஆங்கிலம் / தமிழ் பெயர் தலைப்பெழுத்து , பிறந்த தேதி , புகைப்படம் , பயிற்று மொழி ( Medium ) , Glomybluumi ( First Language ) , Loirofloor பெயர் ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
3. பத்தாம் வகுப்பு மாணவர்களது பெற்றோரது பெயர்களில் ( ஆங்கிலம் / தமிழ் ) உள்ள திருத்தங்களையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
4. மாணவரது / பெற்றோரது தமிழ் பெயரில் திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால் , ஏற்கனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிவிட்டு புதிதாக பெயரை தட்டச்சு செய்ய வேண்டும்.
5. பள்ளியின் பெயரில் திருத்தம் மேற்கொள்வதற்கு பள்ளியின் விவரங்கள் உள்ள பகுதிக்குச் சென்று திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.
6. பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு , அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பாளர்களின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் .
7. மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ அல்லது மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கோ ஏற்கனவே கடிதம் அனுப்பி இருப்பினும் , அக்கடிதத்தில் தெரிவித்துள்ள திருத்தங்களை பள்ளித் தலைமையாசிரியரே தற்போது மேற்குறிப்பிட்டவாறு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
8. பள்ளித் தலமையாசிரியர்கள் மேற்குறிப்பிட்ட முறையில் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு , அதன் விவரத்தினை PRINT எடுத்து அதில் பள்ளித் தலமையாசிரியரின் கையொப்பத்தினை இட்டு ( பள்ளி முத்திரையுடன் ) 01.09.2020 - க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
9. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர்பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும் , மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது . எனவே , பள்ளித் தலைமையாசிரியர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்படவேண்டும்.
10. மாணவர்களது நலன் கருதி , பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு , மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின் , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
கருத்துகள் இல்லை