தேர்வு எழுதாமலே 1 முதல் 30 பாடங்கள் வரை அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்ச்சி
தமிழக கல்லூரிகளில் பயிலும் அரியர் வைத்த மாணவர்களுக்கும் பருவத்தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருந்த பருவ தேர்வின் போது, அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Was
அவர்களுக்கு பல்கலைகழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், கலை-அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் இளங்கலை முதுகலை படிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பொறியியலில் மற்றும் கலைக்கல்லூரிகளில் 1 முதல் 30 பாடங்கள் வரை அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அந்த பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றனர்.
கருத்துகள் இல்லை