Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...


Was
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சேலம் மாவட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரமாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக, விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. 6 மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை காப்பீடு மூலம் கொடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். மற்றப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.

மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு... Reviewed by Rajarajan on 9.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை