சென்னையில் 50% பேருக்கு இயற்கையாகவே உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது - அதிர வைக்கும் ஆய்வின் முடிவுகள்!
சென்னையில் 12000நபர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தது பார்த்ததில், அதில் 50 சதவிகித மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வந்தாலும், தானாகவே குணமாகிவிடும்.
கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு நடத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள, 69 மாவட்டங்களில் ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது.
இந்த ஆய்வின் மூலம் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.
ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் படி பல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகதுறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவுகள் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆய்வின் முடிவின் படி சோதனை செய்யப்பட்ட 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை