Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ரூ.2,500 கட்டணம்! தமிழக அரசு அதிரடி!!



Was
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு புதிய பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 14 நாட்கள் தொகுப்பிற்கான கட்டணமாக ரூ. 2,500 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நோயாளி விரும்புகிறாரோ அவர்களை மட்டும் இத்திட்டத்தில் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். மற்றவர்களுக்கு வழக்கம்போல அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் பணியாற்றுவார்கள். இவர்கள் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளை வழங்குவார்கள். 


அவர்களுக்கு கண்காணிப்பு பெட்டகமும் வழங்கப்படும். அதில் வைட்டமின் மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், பல்ஸ் ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் ஆகியவை இருக்கும். மருந்து சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். இதைத்தவிர்த்து காணொலி காட்சி மூலம் மன நலமருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். யோகா பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். அப்போது அவசர உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்படும்.

வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ரூ.2,500 கட்டணம்! தமிழக அரசு அதிரடி!! வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ரூ.2,500 கட்டணம்! தமிழக அரசு அதிரடி!! Reviewed by Rajarajan on 7.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை