Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ரேஷன் கார்டில் நீங்களே புதிய பெயர் சேர்த்துக் கொள்ளலாம்..! எப்படி..?


Was
பல்வேறு அரசு உதவிகளுக்கு ஆதாரமாக விளங்கும் குடும்ப அட்டையில் ஒருவரின் பெயரை சேர்ப்பது தற்போது எளிமையாகி உள்ளது. 

நீங்களே உங்கள் வீட்டில் இருந்து கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரை ரேஷன்கார்டில் சேர்த்து கொள்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.   முதலில் உங்கள் மொபைலில் கூகுள் மூலம்www.tnpds.gov.in என சர்ச் செய்யவும்.  அதில் பல்வேறு சிறப்பு வசதிகளுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் பயனாளர் நுழைவு என்ற தேர்வை கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் (ரேஷன்கார்டுடன் இணைக்கபட்டுள்ளது) மற்றும் கேப்ட்சா குறியீடை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.  அப்போது பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP வரும். அதனை கொடுத்து உள்நுழைய வேண்டும். திரையில் உங்கள் குடும்ப அட்டையின் முழு விவரங்களும் தோன்றும்.  

இடது ஓரத்தில் அட்டை பிறழ்வுகள் என்ற தேர்வை கிளிக் செய்யவும். பின்பு வலது மேல் மூலையில் புதிய சேர்க்கை என இருக்கும். அதை கிளிக் செய்யவும். 

பிறகு சேவைகளை தேர்வு செய்யவும் என்ற தேர்வை கிளிக் செய்து உறுப்பினர்களை சேர்க்க என்ற தேர்வை உள்ளீடு செய்ய வேண்டும். திரையில் கேட்கப்படும் புதிய உறுப்பினர்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் சேர்க்கப்படும் நபரின் ஆதார் அட்டை/ பிறப்பு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

பிறகு உறுப்பினர் சேர்க்க என்ற அமைப்பை கிளிக் செய்தால் நாம் கொடுத்த விவரங்கள் திரையில் தோன்றும். ஒரு முறை சரிபார்த்து விட்டு உறுதிப்படுத்துதல் என்ற அமைப்பில் உள்ள பாக்ஸை டிக் செய்து விட்டு பதிவு செய்க என்ற அமைப்பை கிளிக் செய்ய வேண்டும். பதிவு முடிந்த பிறகு கொடுக்கப்படும் குறியீட்டு எண்ணை கொண்டு பெயர் ஏற்றம் பற்றிய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். 15 நாட்களுக்குள் உங்கள் ரேஷன் அட்டையில் புதிய நபரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும்.

ரேஷன் கார்டில் நீங்களே புதிய பெயர் சேர்த்துக் கொள்ளலாம்..! எப்படி..? ரேஷன் கார்டில் நீங்களே புதிய பெயர் சேர்த்துக் கொள்ளலாம்..! எப்படி..? Reviewed by Rajarajan on 26.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை