பள்ளிக் குழந்தைகளின் ட்யூசன் வகுப்புகளுக்காக 25 ஆயிரம் கோடி செலவிடும் பெற்றோர்கள்...
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் ட்யூசன் வகுப்புகளுக்காக அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதாகத் தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Was
2017-2018 கல்வியாண்டில் பள்ளிக்கல்வி குறித்துத் தேசியப் புள்ளியியல் அலுவலகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் மாணவர்களின் ட்யூசன் வகுப்புகளுக்காக அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.
நுழைவுத் தேர்வுகளுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் செலவிடும் தொகை இதில் சேர்க்கப்படவில்லை. பள்ளிக்கல்விக்கும் எழுத்தறிவுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடே ஆண்டுக்கு 59 ஆயிரத்து 845 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
பள்ளிக் குழந்தைகளின் ட்யூசன் வகுப்புகளுக்காக 25 ஆயிரம் கோடி செலவிடும் பெற்றோர்கள்...
Reviewed by Rajarajan
on
9.8.20
Rating:
கருத்துகள் இல்லை