விதிமுறைகளை பின்பற்றாத 28 பி.எட் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
விதிமுறைகளைப் பின்பற்றாத 3 அரசு பி.எட் கல்லூரி உட்பட 28 கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி, தகுதியற்ற பல பேராசிரியர்கள் , முதல்வர்களை கொண்டு தரமற்ற பயிற்சி வழங்கியது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை, வேலூர் மற்றும் சைதாப்பேட்டை அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக முறைப்படி பேராசிரியர்களை நியமனம் செய்யாமல், உயர் கல்வித்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுதவிர, 12 தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
விதிமுறைகளை பின்பற்றாத 28 பி.எட் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
Reviewed by Rajarajan
on
15.8.20
Rating:
கருத்துகள் இல்லை