நீட் தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்த இயலாது: உச்சநீதின்மன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்
Was
நீட் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அடுத்த மாதம் 13ந்தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில், தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு,ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1, 14 மற்றும் மே 15ம் தேதிகளில் தேர்வு மையத்தை மாற்றவும், தேர்வு எழுதும் நகரங்களை மாற்றவும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் அறிவிப்பின் படி நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெறுவதாக இருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக தேதி மாற்றப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் நீட் தேர்வினை நடத்த வேண்டும் என, வெளிநாடு வாழ் மாணவர்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய தேர்வு முகமை அந்த கோரிக்கையை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு என்பது பல்வேறு விதமான வினாக்கள் கொண்ட தேர்வு என்றும், இந்த தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் சமநிலை கடைபிடிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் வேண்டும் எனக் கூறியுள்ள தேசிய தேர்வு முகமை, எனவே ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்த சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை