Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது



ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' செய்யப்பட்டதை குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், கொரோனா தாக்கத்தால், பள்ளிகள் மூடப்பட்டதால், பாடங்கள் நடத்தப்பட வில்லை. ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கியதில் இருந்து, பள்ளிகள் இயங்கவில்லை.பின், கொரோனா தாக்கம் குறைந்ததால், ஜன., 19 முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. பிப்., 8 முதல், ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.


இந்நிலையில், இந்த கல்வியாண்டில், ஒன்பது முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாணவர்கள், முழு ஆண்டு தேர்வு மற்றும் பொது தேர்வுகள் எதுவுமின்றி, 'ஆல் பாஸ்' செய்யப்படுவதாக, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது:முதல்வர் அறிவித்தது போல, நடப்பு கல்வி ஆண்டில், தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும், அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டு தேர்வு இன்றி, தேர்ச்சி பெறுகின்றனர்.


மேலும், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களும், பொது தேர்வு இன்றி, தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, பள்ளிகளில் இருந்து பெற்று, அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான, உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

flipkart online
ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, தேர்வுகள் இன்றி, 'ஆல் பாஸ்' குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது Reviewed by Rajarajan on 28.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை