Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய பட்ஜெட் தாக்கல்., என்னென்ன சலுகைகள்? இதோ உங்களுக்காக.!

union budget 2021
Was
மத்திய பட்ஜெட் தாக்கல்., என்னென்ன சலுகைகள்? இதோ உங்களுக்காக.! கொரோனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு தடுப்பூசிகளை கொண்டுவந்துள்ளது. விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம். சர்வதேச பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி - நிர்மலா சீதாராமன். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுயசார்பு திட்டத்தின் கீழ் 27 லட்ச கோடிக்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம். சுகாதார கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு மேலும் இரண்டு தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும். தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது. பிரதமரின் சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு. நடப்பு பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு. நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். நீர்வளத்துறையில் ஜன் ஜீவன் மிஷன் அறிமுகம். உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்படும். மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் ரூ.1.01 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும். தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் சாலை பணிகள் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்களை செயல்படுத்தப்படவுள்ளன. மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். மேலும் பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் மேலும் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கும். சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு. ரயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு. பேருந்து வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. காற்றுமாசு கட்டுப்பாடு திட்டம் ரூ.2,217 கோடி ஒதுக்கீடு. மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொச்சி மெட்ரோ ரயில் மேம்பாட்டிற்கு ரூ.1,900 கோடி ஒதுக்கீடு. 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். 20 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை அழிக்க தன்னார்வ அடிப்படை திட்டம் செயல்படுத்தப்படும். மின்நுகர்வோர் எந்த நிறுவனத்திடமும் இருந்து மின்சாரத்தை பெற புதிய திட்டம் அறிமுகம். சுகாதாரத்துறை ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கீடு. சுகாதார துறைக்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு. இன்சூரன்ஸ் திட்டம் - அந்நிய முதலீடு 74% ஆக உயர்வு. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 495 லிருந்து 74% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு (IPO) வெளியீடு திட்டம் அறிமுகம். 2 பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கை தொடரும். பங்குகள் விற்பனை ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட திட்டம். 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவர்க்கும் கல்வி என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறையில் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும். கோதுமை, நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது நீடிக்கும். அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். நடப்பாண்டில் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பில் விவசாய விளைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். ரூ.1.65 லட்சம் கோடிக்கு விவசாய கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனின் அரசு உறுதி பூண்டுள்ளது. ஏர் இந்தியா பங்குகளை விற்கும் அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியானது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்பாடு செய்யப்படும். கிராமபுற உள்கட்டமைப்புக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மேற்குவங்கத்தில் சாலை பணிகள் மேம்பாட்டுக்கு ரூ.95 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும். தேசிய மொழிகள் மொழிபெயர்ப்பு திட்டம் உருவாக்கப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு. லடாக்கில் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைகழகம் உருவாக்கப்படும் என அறிவிப்பு. உயர்கல்வித்துறைக்கு புதிய குழு அமைக்கப்படும். நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மின்னணு முறையில் மேற்கொள்ள ரூ.3,768 கோடி ஒதுக்கீடு. நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 6.8%ஆக குறையும். அடுத்த நிதியாண்டில் அரசின் செலவுகள் ரூ.34.85 லட்சம் கோடியாக உயரும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி, சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க திட்டம். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை மேற்கோள்கட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. முதியோருக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதுடையவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். 75 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை நம்பியிருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற மற்றோரு குறளையும் மேற்கோள்கட்டியுள்ளார். வீட்டுக்கடன் வட்டிக்கு சலுகை நீட்டிப்பு. ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டு கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு. new secretary of tamil nadu

மத்திய பட்ஜெட் தாக்கல்., என்னென்ன சலுகைகள்? இதோ உங்களுக்காக.! மத்திய பட்ஜெட் தாக்கல்., என்னென்ன சலுகைகள்? இதோ உங்களுக்காக.! Reviewed by Rajarajan on 1.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை