9 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
9 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
மாணவர்களை கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி பிரித்து அமர வைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு மாணவர்கள்:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் முன்னதாக திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதன் படி கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று முதல் கட்டமாக 10, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
9 மற்றும் 11ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு:
அடுத்த கட்டமாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த திங்கள் கிழமை முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னால் அரசு கொரோனா தொற்று நடவடிக்கைகளை வெளியிட்டு அதனை பள்ளிகள் முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியது. அரசின் அறிவிப்பின் படி, மாணவர்களுக்கு இடையில் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கருத்து:
ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளதால் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பள்ளிகள் இதனால் சிரமங்களை சந்திக்கின்றன என்றும், பள்ளிகளை திறந்தும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த முடியாமல் உள்ளது என்று தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். நடுநிலை ஆசிரியர்களை பயன்படுத்தினாலும் சில பள்ளிகளில் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தற்காலிகமாக அரசு நடுநிலை பள்ளிகளில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை