உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
ஒரே இடத்தில் 50% அதிகமான மாணவர்கள் இருக்கக்கூடாது.
ஆன்லைன் முறையில் மாணவர்கள் பாடங்களை பயில விரும்பினால் அவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் முறையில் வழங்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இரண்டு ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாளிலும், மற்றொரு நாளில் அடுத்த இரண்டு ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்த வேண்டும். வகுப்புகளை சுழற்சி முறையில் இவ்வாறு தொடர்ந்து நடத்தலாம்.
விடுதியில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் இருந்து வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும். தேவை என்றால் மட்டுமே விடுதிகளை திறக்க வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்களை எந்த சூழலிலும் விடுதியில் அனுமதிக்க கூடாது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை