தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பின்னர் கடந்த பிப்ரவரி 8 முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு விட்டன.
தற்போது அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு தேர்வு அட்டவணையும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பாடங்களை தொடங்குவது குறித்து மருத்துவத் துறை, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
Reviewed by Rajarajan
on
17.2.21
Rating:
கருத்துகள் இல்லை