11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு முதல் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்தது. அதற்கு முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் மிகவும் தாமதமாக தான் செயல்பட தொடங்கியது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை.
தமிழக அரசு மாணவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட சதவீதம் குறைத்து உள்ளது. பொதுத்தேர்வு நடப்பதற்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு பள்ளிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை
Reviewed by Rajarajan
on
21.2.21
Rating:
All these students will suffer if you cancel the exam this year also
பதிலளிநீக்கு