Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுமா...? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்...!

tamil nadu govt

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது குறித்து நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இதற்க்கு முன்பாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 59-ஆக கடந்த மே மாதம் 14-ம் தேதி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. 

காரணம் அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்கான செலவை கணக்கிட்டு செலவை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும், ஏனெனில் ஓய்வு பெறுபவர்களுக்கு படி பலன்கள் போன்றவற்றை வழங்கும் போது நிதி பற்றாக்குறையின் காரணமாக ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு வழங்க முடியாத ஒரு சுழலானது அரசுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் காரணமாகவே, கடந்த ஆண்டு மே7-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 

இதுு கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஏனெனில் படித்திருக்கூடிய இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும். காரணம் ஓய்வு பெறுபவர்களின் வயது உயரும் போது பணியிடங்கள் காலியிடங்கள் இல்லாமல் இருக்க கூடிய சூழல் ஏற்படும் என்ற எதிப்பும் மற்றோரு புறம் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குவதை தள்ளிப்போடவே அரசு வயதை உயர்த்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்தத நிலையில் அடுத்த கட்டமாக 59-வயதில் இருந்து 60-ஆக உயர்த்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை ஓய்வூதிய பலன்கள் மூலம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுமா...? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்...! அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுமா...? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்...! Reviewed by Rajarajan on 4.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை