பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு

Was
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " முழுமையாக பள்ளி திறப்பது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்டுபின் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் 28 ஆயிரம் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும். அதற்கு பிறகு மத்திய அரசு கூறும்படி தடுப்பூசி போடப்படும். பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாது பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
1.2.21
Rating:
கருத்துகள் இல்லை