10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணையின் படி தேர்வுகள் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. மேலும் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணைய வழியிலும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பாடங்களை நடத்தியது. இந்நிலையில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்கவிருப்பதால் முதல் கட்டமாக ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புக்ளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புக்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடங்களில் இருந்து 30% குறைக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
Reviewed by Rajarajan
on
19.2.21
Rating:
கருத்துகள் இல்லை