Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

IT Return வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம்

IT Return

வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம்!! 2019-2020ம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 15 ம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு: கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பொருளாதார நலிவினால் பொது மக்கள் கடும் பதிப்படைந்தனர். இதனால் வழக்கமாக ஜூலை 31ம் தேதி வரை வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு வழங்கப்படும் அவகாசம் சென்ற ஆண்டில் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தணிக்கை கணக்கு: வருமான வரிக்கணக்கு தணிக்கை செய்வதற்கு அவசியம் இல்லாதவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அபராதம் இல்லமல் தாக்கல் செய்வதற்கும், தணிக்கை செய்ய வேண்டியவர்கள் பிப்ரவரி 15ம் தேதி வரை அபாரதமின்றி தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அபாரதமின்றி தாக்கல் செய்ய விரும்புபவர்கள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.

IT Return வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம் IT Return வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம் Reviewed by Rajarajan on 9.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை