9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்.. வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில்..
Was
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் அடுத்ததாக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் 9, 10, 11, 12 என 4 வகுப்புகளும் செயல்பட உள்ளதால் பள்ளிகளில் கட்டுப்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் படி கிருமிநாசினி தெளித்தல், கைகளை கழுவுதல், பள்ளி வளாகங்களை தூய்மை படுத்துதல், மாணவர்களுக்கு சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்ய பள்ளிகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் எனவும் காலை 9.30 க்கு ஆரம்பித்து 4.30 வரை பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் 10,12 மாணவர்களை போல் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் முதல் 2 நாட்கள் பாடங்கள் நடத்தாமல் உளவியல் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவுறுத்தல் குறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்.. வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில்..
Reviewed by Rajarajan
on
3.2.21
Rating:
கருத்துகள் இல்லை