Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊழியர்களின் சிறந்த சேமிப்பு திட்டத்திற்கும் புதியதாக வரி


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக, இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இருந்து வருகிறது.


இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே.


ஆனால் கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும்.


அரசின் இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது அதிக சம்பளம் வாங்குவோருக்கு பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதாவது மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல் பி.எஃப். செலுத்துபவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். ஏனெனில் ஊழியரின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். அதாவது 1,73,608 ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும், எனவே அவர்கள் அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.


அரசு இந்த வரி விதிப்பின் மூலம் அதிக வருமானம் உடையவர்களுக்கு வரி சலுகைகள் கிடைப்பதை கட்டுப்படுத்துவது என்றாலும், பலரும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் சேமிக்க நினைக்கின்றனர். அதோடு வரி சலுகையும் இருந்ததால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் இந்த முடிவால் சேமிப்புகள் குறையலாம்.



ஊழியர்களின் சிறந்த சேமிப்பு திட்டத்திற்கும் புதியதாக வரி ஊழியர்களின் சிறந்த சேமிப்பு திட்டத்திற்கும் புதியதாக வரி Reviewed by Rajarajan on 21.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை