அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் பிற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க பரிசீலனை செய்யப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் முதல்வர் அவர்கள் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
Reviewed by Rajarajan
on
9.2.21
Rating:
கருத்துகள் இல்லை