புதிய தலைமை செயலாளராக மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் நியமனம் அரசு உத்தரவு
Was
தமிழகத்தில் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்களை நியமித்துள்ளதாக தலைமை செயலத்தின் முந்தைய செயலாளர் சண்முகம் நேற்று அரசாணை பிறப்பித்தார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் பதவி ஏற்பு விழா மிக எளிமையாக நடைபெற்றது. 47 வது தலைமை செயலாளர்: தமிழகத்தின் தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட உள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைத்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர். மத்திய அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பொதுவாக தமிழக அரசு பணியில் இருப்பவர்கள் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். ஆனால் அவர் 1 ஆண்டு மட்டுமே பணியாற்றிய நிலையில் அவரை மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தற்போது அவர் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைமை செயலாளராக மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் நியமனம் அரசு உத்தரவு
Reviewed by Rajarajan
on
1.2.21
Rating:
கருத்துகள் இல்லை