12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு அவர்களது குழந்தைகள் போல் கருதி நீண்ட நேரம் பாடங்கள் எடுக்க வேண்டும். ஒரு வகுப்பை 1 மணி நேரம் எடுத்து விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அரசு ஆய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் பேட்டி!!
Reviewed by Rajarajan
on
19.2.21
Rating:
Reviewed by Rajarajan
on
19.2.21
Rating:


கருத்துகள் இல்லை