Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ரூ.50,000 ரூபாய் டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் செலுத்தும் நபர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்

IT Return
2021 மத்திய பட்ஜெட்டில் ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒருவர்் பல வழிகளில் வருமானம் ஈட்டும்போது அவர் பெறும் தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது டி.டி.எஸ் (Tax Deducted at Source) எனப்படும். அது போல ஒரு வியாபாரி குறிப்பிட்ட பொருள்களை விற்கும்போது டி.சி.எஸ் (TCS -Tax Collected at Source) வசூல் செய்யப்படுகிறது 2021 மத்திய பட்ஜெட்டில் இது போல ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறுு அதிக டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் செலுத்திய நபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் அதிக அபராதம் விதிக்கப் படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அதிக ஊதியம் ஈட்டுபவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் நோக்கில் எடுக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 50,000 ரூபாய்க்கும் மேல் வரிப் பிடித்தம் அல்லது வரி வசூல் செய்யப்பட்டு இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் வழக்கமான அபராதத்தைவிட இரு மடங்கு தொகை அல்லது அவர்களின் அடிப்படை வருமான வரியைவிட 5% அதிகமான வரியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வரிக் கணக்கு தாமதமாகச் செய்யும்பட்சத்தில் ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர் ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் ரூ.10,000-மும் அபராதம் செலுத்த வேண்டும். 

ஆனால்், மாத ஊதிய டி.டி.எஸ் அல்லது லாட்டரி போன்ற பரிசுத் தொகை கிடைப்பதன் மூலமாக டி.டி.எஸ் பிடித்தம் செய்யப் பட்டிருந்தால் இந்த அபராதத் தொகை செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நம்மில் பலர் ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்பு கணக்கு போன்ற வழிகளில் பணத்தை சேமித்து அதில் வட்டி பெற்றுக்கொண்டு இருப்போம். 

அதிக வாடகை போன்ற வழிகளில் வருமானம் பெறும்போதும் பொதுவாக வரி பிடித்தம் செய்யப்படும். இது போல பல வழிகளில் வரிப்பிடித்தம் நம்மிடம் செய்யப்படலாம். அவ்வாறு ஒரு வருட காலத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் வரிப்பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் இனி அசட்டையாக இருந்துவிடாதீர்கள். அப்படி இருந்தால் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 
ரூ.50,000 ரூபாய் டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் செலுத்தும் நபர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் ரூ.50,000 ரூபாய்  டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் செலுத்தும் நபர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் Reviewed by Rajarajan on 7.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை