Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

2021 சர்வதேச ஆசிரியர் மற்றும் மாணவர் விருதுகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

 



2021 சர்வதேச ஆசிரியர் மற்றும் மாணவர் விருதுகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!! ‘வர்க்கி குரூப்’ நிறுவனம் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளுக்கு சுமார் 8 கோடி ஒதுக்கியுள்ளது. சர்வதேச விருதுகள்: துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘வர்க்கி குரூப்’ நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சன்னி வர்க்கி கேரளாவை சேர்ந்தவர். அவர் 2010 ஆம் ஆண்டு லண்டனை தலைமை இடமாக கொண்ட ‘வர்க்கி பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச விருதுகள் வழங்க அறிவிப்பு வெளியான நிலையில் ஆசிரியர் விருதுக்கு 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.4 கோடி) பரிசுத் தொகையும், மாணவர் விருதுக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36.5 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு 16 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி வழியாகவோ அல்லது பகுதி நேரமாக கற்கும் மாணவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். சர்வதேச விருதுக்கான தகுதிகள்: இந்த விருதினை பெற விருப்பமுள்ள மாணவர்கள் அவர்கள் புரிந்த கல்வி சாதனைகள், அந்த சாதனை குறித்து சக மாணவர்களின் தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள், இலக்கை அடைய அவர்கள் எடுத்த நடவடிக்கைகள், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த விருதுக்கான ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகள், ஊரில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் விதம், வகுப்பறை மட்டும் அல்லாமல் சமுகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், குழந்தைகளை சிறந்த குடிமகனாக மாற்றுவது, கற்பித்தல் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

2021 சர்வதேச ஆசிரியர் மற்றும் மாணவர் விருதுகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!! 2021 சர்வதேச ஆசிரியர் மற்றும் மாணவர் விருதுகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!! Reviewed by Rajarajan on 5.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை