Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நீட் தேர்வு ஹால்டிக்கெட்ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 'எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்' படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 15-ஆம் தேதி முதல் www.nta.ac.in, www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு ஹால்டிக்கெட்ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு ஹால்டிக்கெட்ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Reviewed by Rajarajan on 10.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை