அரசு ஊழியரின் தபால் வாக்குகள் 50% மட்டுமே பதிவாகியுள்ளது - மாநில தேர்தல் ஆணையம்
சென்னை தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 100 சதவீதம் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் இன்னும் 50 சதவீதம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில், கடந்த தேதிமக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் என 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டார்கள். காவல் துறையைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் 6 மணி வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்றினர். இவர்களில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள். காவல் துறையில் தங்கள் தொகுநியை விட்டு வெளியில் சென்று வாக் குச்சாவடியில் பணியாற்றியோருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டு, தங்கள் வாக்கு களைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர் களுக்கு தேர்தல் பயிற்சி வழங் கப்பட்ட பொழுது தபால் வாக்கு வழங்கப்பட்டது.
தபால் வாக்கு படிவத்தை பூர்த்தி செய்து, தாங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வாக்கை செலுத்தலாம். மேலும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே.23-ம் தேதி காலை 6 மணி வரை அளிக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது. . இந்த வகையில், தமிழகத்தில் 100 சதவீதம் தபால் வாக்குகளை காவலர்கள் பதிவு செய்து அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அஇகாரி சத்யபிரத சாஹு தாவது: தமிழகத்தில் கடந்த ஏப்.23-ம் தேதிப்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 592 பேருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங் கப்பட்டன. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 622 தபால் வாக்குப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். . இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
அரசு ஊழியரின் தபால் வாக்குகள் 50% மட்டுமே பதிவாகியுள்ளது - மாநில தேர்தல் ஆணையம்
Reviewed by Rajarajan
on
26.4.19
Rating:
கருத்துகள் இல்லை