Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும் ஆசிரியர்‌ கூட்டமைப்பு சார்பில்‌ முதலமைச்சரை சந்திக்க மனு


அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும்  ஆசிரியர்‌ கூட்டமைப்பு சார்பில்‌ முதலமைச்சரை சந்திக்க அளித்த தகவல் 

"வணக்கம்‌. நிபந்தனைகள்‌ இல்லாத போது பட்டதாரி ஆசிரியர்களாக  அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணி நியமனம்‌ பெற்ற ஆசிரியர்‌ கூட்டமைப்பு சார்பில்‌ இந்த மனு.23/8/2010 க்கு பிறகு நாங்கள்‌ பணி நியமனம்‌ பற்றாலும்‌ TET கட்டாயம்‌ என்ற நிபந்தனைகள்‌ 16/11/2012 ல்‌ தான்‌ கல்வி இயக்குனர்‌ செயல்முறைகள்‌ மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்தப்படத்து, TET நிபந்தனைகள்‌ சார்ந்த பல சிக்கலான சூழலில்‌ எங்களுக்கே தெரியாமல்‌ நாங்கள்‌ சிக்கித்‌ தவிக்கிறோம்‌. அரசு அதிகாரிகளுக்கு RTI சட்டம்‌ பற்றி தெரியாததன்‌ விளைவு தற்போது நங்கள்‌ கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ள சூழல்‌, TET லிருந்து விலக்கு கோரி பலமுறை பல கல்வி அமைச்சர்களைச்‌ சந்தித்தும்‌ எங்கள்‌ கண்ணிர்‌ தீர்க்க முன்வரவில்லை. அதிகாரிகளை நாடினால் அவர்கள்‌ செய்த பிழைகள்‌ தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில்‌ மேம்போக்கான பதில்‌ கூறி அனுப்பி விடுகின்றனர்‌. TET சட்டம்‌ பற்றியும்‌ , அதை தமிழகத்தில்‌ ஏற்கெனவே பணியில்‌ சேர்ந்தவர்களுக்கு முன்‌ தேதியிட்டு TET நிபந்தனையில்‌ கொண்டு வந்ததும்‌ அந்த காலகட்ட கல்வித்‌ துறை முதன்மை அதிகாரிகளே. அப்போது முதல்‌ இன்று வரை தான்தோன்றித்‌ தனமாக ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும்‌ ஒவ்வொரு விதமான நடைமுறைகள்‌ பின்பற்றி வருகின்றனர்‌. அதிகப்படியான அதிகாரிகளுக்கு முழு புரிதல்‌ இல்லை. அதனாலேயே இன்றும்‌ எங்கள்‌ சிக்கல்கள்‌ தீர்க்கப்படாமல்‌ உள்ளன. ஆகவே நாங்கள்‌ சுமார்‌ 300 அரசு உதவி பெறும்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ குடும்பங்கள்‌ TET லிருந்து விலக்கு வேண்டுதல்‌ தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ ஆகிய தங்களை சந்திக்க தயாராக உள்ளோம்‌. தங்களுக்கு ஏதுவான நேரத்தை எங்களுக்கு ஒரு பத்து நிமிடம்‌ ஒதுக்கீடு செய்து உதவுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌. உதவுங்கள்‌ நன்றி"

மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 
அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும் ஆசிரியர்‌ கூட்டமைப்பு சார்பில்‌ முதலமைச்சரை சந்திக்க மனு அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும்  ஆசிரியர்‌ கூட்டமைப்பு சார்பில்‌ முதலமைச்சரை சந்திக்க மனு Reviewed by Rajarajan on 30.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை