Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர்


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கல்லூரிகளில் நேற்று விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கல்லூரிகளில் நேற்று காலை முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரூ.2-ம், பிற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.50-ம் செலுத்தி விண்ணப்பங்களை வாங்கினர். இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியிலும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

கடந்த ஆண்டு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 600 மதிப்பெண் களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இனிவரக்கூடிய காலங்களிலும் இதேமுறை தான் பின்பற்றப்பட இருக்கிறது.

இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங் களை தவிர, பிற பாடப்பிரிவுகளுக்கு 400 மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்து வெளியிடப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பி.காம் படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. விண்ணப்பங்களை பெற வந்திருந்த பெரும்பாலான மாணவிகள் பி.காம் படிப்பையே தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.
கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் Reviewed by Rajarajan on 16.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை