எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வரும் ஏப்ரல் 29 தேதி வெளியிடப்படும்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19-ல் வெளியானது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வை மொத்தம் 9.97 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் இப்போது நிறைவு பெற்றுவிட்டன. இதையடுத்து தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தேர்வுத் துறை முடுக்கிவிட்டுள்ளது. இத னால் ஏற்கெனவே அறிவித்தபடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எந்த மாறுதலும் இல்லாமல் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் பதிவு செய்த செல் போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்களுடன் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வரும் ஏப்ரல் 29 தேதி வெளியிடப்படும்
 
        Reviewed by Rajarajan
        on 
        
24.4.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
24.4.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை