வேலுார் லோக்சபா தொகுதியில் தேர்தல் ரத்து?
வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த், தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், துரைமுருகன் வீட்டில், மார்ச், 30ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், 10 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே சிக்கியது. மறுநாள், துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசனின், சிமென்ட் கிடங்கில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
சோதனையில், மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம் பறிமுதலானது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விபர அறிக்கையை, வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். நேற்று மாலை, தலைமை செயலகத்தில், சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜனுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
இவர்களின் அறிக்கை அடிப்படையில், வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்யும் முடிவை, தேர்தல் ஆணையம், விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேலுார் லோக்சபா தொகுதியில் தேர்தல் ரத்து?
Reviewed by Rajarajan
on
6.4.19
Rating:
கருத்துகள் இல்லை