அனைத்து அரசு உயர் ! மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...!
அரசு உயர் ! மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு
விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
மட்டுமே விடுப்பு விதிகளின்படி விடுமுறை துய்க்க
அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட அலுவலக பணிகள்
உள்ளிட்ட பணிகளுடன் *2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
மாற்றுச்சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், தேர்வில்
தோல்வியுற்ற மாணவர்களை உடனடி தேர்வெழுத அறிவித்தல்,
மதிப்பெண் பட்டியலில் மாணவர்கள் சார்ந்த விவரங்களில் திருத்தம்
இருப்பின் அவற்றை தேர்வுத்துறை வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளுதல்,
புதிய மாணவர்கள் சேர்க்கை சார்பான பணிகள் குறித்து,
உடனுக்குடன் அனுப்பப்படும் மின்னஞ்சல் / இணையதள கடிதங்களுக்கு
பதில் அளித்தல், மேலும், அரசு உயர் ! மேல்நிலைப்பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க நேரிடின் சார்ந்த மாவட்டக் கல்வி
அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே விடுப்பு எடுக்க வேண்டும். பள்ளி
அளவிலான அலுவலக பணிகளை பள்ளியின் தலைமை ஆசிரியருடன்
இணைந்து உதவியாளர் / இளநிலை உதவியாளர் ! பதிவறை எழுத்தர்
அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களும் தவறாமல்
மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைமை ஆசிரியர்
அலுவலக பணியாளர்கள் அலுவலக நேரத்தில் காரணமின்றி பள்ளிகளில்
இல்லாமல் இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள
நேரிடும் என்பது தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
அனைத்து அரசு உயர் ! மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...!
Reviewed by Rajarajan
on
24.4.19
Rating:
கருத்துகள் இல்லை