பள்ளிகளிலேயே பிளஸ் 2/ 10 மாணவ - மாணவியரின் வேலைவாய்ப்பு பதிவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன; 10ம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியரின் தேர்ச்சியை, வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில், பதிவு செய்ய வேண்டும். இதற்கு, 2011 முதல் பள்ளிகளிலேயே வசதிகள் செய்து, ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டும், அனைத்து பள்ளிகளிலும், வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடித்தவர்களுக்கு, நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டதும், அவரவர் படித்த பள்ளியில், ஆன்லைனில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, மாணவர்களின் சுய விபரங்களை தலைமை ஆசிரி யர்கள், தற்போதே தயார் செய்து வைத்துஇருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பள்ளிகளிலேயே பிளஸ் 2/ 10 மாணவ - மாணவியரின் வேலைவாய்ப்பு பதிவு
Reviewed by Rajarajan
on
30.4.19
Rating:
கருத்துகள் இல்லை