Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் போடாதீங்க! அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.


ஓட்டுச்சாவடிகளில், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் பி - 1, பி - 2, பி - 3 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
* ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் முகவர்கள், மொபைல் போனில் பேசுதல், புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் 
* ஓட்டு போட வரும், வி.ஐ.பி.,க்களுக்கு அலுவலர்கள் எழுந்து நின்று, வணக்கம் செலுத்தவோ, தனி கவனம் செலுத்தவோ கூடாது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முகவர்கள் முன்னிலையில் சரிசெய்ய வேண்டும்.
* மதியம், 3:00 மணிக்கு மேல், அரசியல் கட்சி முகவர்களை வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்க கூடாது; முகவர்கள், அரசியல் விஷயங்களை பேசக்கூடாது
* பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். பாதுகாப்பு இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது
* தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் வைத்து மட்டுமே ஓட்டுப் போட முடியும்; பிற ஆவணங்களை, அடையாளத்துக்கு பயன்படுத்தக் கூடாது
* வாக்காளர்கள், இடது கை ஆள்காட்டி விரலில் நகத்துக்கும், தோலுக்கும் மத்தியில், அழியாத மை வைக்க வேண்டும். இடது கையில் விரல்கள் இல்லாத பட்சத்தில், வலது ஆள்காட்டி விரலில், மை வைக்கலாம். அந்த விரலும் இல்லையென்றால், அதற்கடுத்த விரலில் வைக்கலாம். இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாதவர்களுக்கு, இடது மணிக்கட்டில் மை வைக்கலாம். இரண்டு கைகளுமே இல்லாதவருக்கு, இடது கால் விரலில் மை வைக்கலாம். 
ஓட்டுச்சாவடி மையம் வந்தும் ஓட்டுப் போட முடியாதவருக்கு, தலைமை அலுவலர், ஓட்டு போட உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் போடாதீங்க! அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு. வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் போடாதீங்க! அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு. Reviewed by Rajarajan on 6.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை